திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் சார்பில் 'ஐந்து உறுப்பினர் குழு' நியமனம் - ப.சிதம்பரம் வரவேற்பு
சென்னை, 22 நவம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் இடையேயான கூட்டணி நீண்ட காலமாக நீடித்து வரும் நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க முயற்சிகள் நடந்து வருவதாக பேச்சுகள் கிளம்பின. அதிக சீட், ஆட்சியில்
திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் சார்பில்  'ஐந்து உறுப்பினர் குழு' நியமனம் - ப.சிதம்பரம் வரவேற்பு


சென்னை, 22 நவம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் இடையேயான கூட்டணி நீண்ட காலமாக நீடித்து வரும் நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க முயற்சிகள் நடந்து வருவதாக பேச்சுகள் கிளம்பின.

அதிக சீட், ஆட்சியில் பங்கு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி என்றும், இல்லையென்றால் தவெகவுடன் கூட்டணி அமைக்கப்படும் என சில காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாகவே பேசி தலைமைக்கும் அழுத்தம் கொடுத்து வந்தாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று (நவ 22) தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு சட்டசபை தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை 'ஐந்து உறுப்பினர் குழு' வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன்.

'இந்தியா கூட்டணி' யின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது. அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b