Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 நவம்பர் (ஹி.ச.)
திமுக வர்த்தகர் அணியின் நிர்வாகிகள் கூட்டம் வரும் 24ம் தேதி கோவையில் நடைபெறவுள்ளது.
இது குறித்து தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்துமாணிக்கம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
தி.மு.க. வர்த்தகர் அணி தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தலைவர்கள் கூட்டம் 24ம் தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணி அளவில், கோவை, விமானநிலையம் அருகில், காளப்பட்டி ரோடு, ஓட்டல் ஜோன் கனெக்டிவ்-ல் எனது தலைமையில் நடக்கிறது.
கோவை மாவட்ட திமுக செயலாளர்கள்/பொறுப்பாளர் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருககேசன், செந்தமிழ்செல்வன் மற்றும் மாநில வர்த்தகர் அணி நிர்வாகிகளான துணைத் தலைவர்கள் கோவி. செழியன், பழஞ்சூர் கே.செல்வம், எஸ்.மோகன் -வர்த்தகர் அணி இணைச் செயலாளர்கள் மாலைராஜா, வி.ஜெயன், கோவை நா.முருகவேல், பி.டி.பாண்டிச்செல்வம், எஸ்.முத்துச்செல்வி, என்.தாமரைபாரதி,
எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர் - துணைச் செயலாளர்கள் ஐ.கென்னடி, டி.ஆர்.முத்துச்சாமி, எம்.எஸ்.அசோக் பாண்டியன், மீஞ்சூர் கே.ஜி.பாஸ்கர்சுந்தரம், சிவகாசி த.வனராஜ், வி.பி.மணி, இ.ராமர், க.தனசெல்வம், பெ.சுந்தரவரதன், வே.பல்லவிராஜா, வி.எஸ்.ராமகிருஷ்ணன், பி.தர்மசெல்வன், ஆ.சத்தியமூர்த்தி, குன்னம் ராஜேந்திரன், கிருஷ்ணகிரி கே.வி.எஸ்.சீனிவாசன், கிருஷ்ணகிரி பி.டி.அன்பரசன் முன்னிலை வகிக்கின்றனர்.
கோவை மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர்கள் பி.மாரிசெல்வன், ஏ.கே.வேலுச்சாமி, கே.கே.கண்ணன் வரவேற்கிறார்.
கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தலைவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு துணை முதல்வர், திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள், எஸ்.ஐ.ஆர் கவனப்படுத்துதல், கட்சி ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b