Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 22 நவம்பர் (ஹி.ச.)
கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம், திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அமீபா மூளைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
பெரும்பாலும் தேங்கிக் கிடக்கும் மற்றும் அசுத்தமான தண்ணீர் மூலம் தான் அமீபா மூக்கு, வாய் வழியாக புகுந்து மூளை காய்ச்சலை ஏற்படுத்துகிறது.
இந்த பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் திருவனந்தபுரம் மாவட்டம் ஆனாடு பகுதியைச் சேர்ந்த விஷ்ணு மனைவி வினயா (வயது 26) என்பவர் நேற்று அமீபா மூளை காய்ச்சல் பாதித்து மரணம் அடைந்தார்
கடந்த 40 நாட்களுக்கு மேலாக அவர் நெடுமங்காடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
அந்த வகையில் பலியானவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
அதிலும் இந்த மாதத்தில் 17 பேர் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதில் 7 பேர் அடுத்தடுத்து பலியாகி உள்ளனர்.
இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நோயால் திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் 8 பேர் இறந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / JANAKI RAM