Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 நவம்பர் (ஹி.ச.)
சென்னை மாவட்டம் சோழிங்கநல்லூர் கோட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 25.11.2025 (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில், செயற் பொறியாளர் / இயக்கம் & பராமரிப்பு / சோழிங்கநல்லூர், சேரன் நகர், பெரும்பாக்கம், சென்னை - 100. (110 கி.வோ பெரும்பாக்கம் துணைமின் நிலையம் அருகில்) அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
சோழிங்கநல்லூர் (மேடவாக்கம், நன்மங்கலம், ஜல்லடியன்பேட்டை, கௌரிவாக்கம், பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், எஸ்.கொளத்தூர், நாராயணபுரம், சித்தாலப்பாக்கம் , அரசன்காலனி, பெரும்பாக்கம்) ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மின்சாரத் துறை சார்ந்த
குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக மேற்பார்வை பொறியாளர்/சென்னை மி.ப.வ/தெற்கு-2 கேட்டுக் கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b