Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 22 நவம்பர் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலான மழை மற்றும் அதிகாலை நேரங்களில் விழும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்து காணப்படுகிறது.
இந்நிலையில் நாளை முதல் கார்த்திகை மாதத்தின் சுப முகூர்த்த தினங்களும், அடுத்தடுத்து திருக்கார்த்திகை திருநாளும் வருகை தருவதால் பூக்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்து விற்பனை ஆகிறது.
அதன்படி நேற்று வரை 1700 க்கு விற்பனை ஆகிய மல்லிகை பூ இன்று 4500 க்கு விற்பனை செய்யப்படுகிறது, இதே போல் கனகாம்பரம் மற்றும் காக்கரட்டான் 2000 ரூபாய்க்கும், முல்லை 1300, பிச்சி 1200 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. மேலும் சம்மங்கி, பன்னீர் ரோஸ், பட்டன் ரோஸ் 300 ரூபாய்க்கும், அரளி 250, செவ்வந்தி மற்றும் மரிக்கொழுந்து 200 ரூபாய்க்கும் விற்பனை ஆகி வருகிறது.
நேற்று வரை குறைவான விலையிலேயே விற்பனை ஆகி வந்த பூக்களின் விலை இந்த வரத்து குறைவு மற்றும் முகூர்த்த தினங்களை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / Durai.J