Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 22 நவம்பர் (ஹி.ச.)
கோவை, வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள நவாவூர் பிரிவை சேர்ந்த 64 வயது மதிக்கப்பட்ட பெண்ணிடம், இன்ஸ்டிடியூஷனல் பங்குகள் மற்றும் ஐபிஓ களில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று Glen Industries and Anthem Bioscience Ltd போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்தால் லாபம் அதிகமாக கிடைக்கும் என்றும் கூறி அவரை நம்ப வைத்து ரூ. 38,62,938/- முதலீடு செய்ய வைத்து ஆன்லைன் மூலமாக ஏமாற்றி மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் கோவை மாநகர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மாநகர் சைபர் கிரைம் போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டு கர்நாடகா மாநிலம் பெல்காம்மை சேர்ந்த 1) தங்கராஜூ (47) 2) சண்முக சுந்தரம் (50) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Hindusthan Samachar / V.srini Vasan