Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 22 நவம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி வட்டம், அய்யனடைப்பு ஊராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 220 அடுக்குமாடி குடியிருப்புகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் முன்னிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று (நவ 22) திறந்து வைத்து பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஆணைகளை வழங்கினார்.
முன்னதாக கூட்டுடன்காடு ஊராட்சியில் ரூ.45 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தினை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, கூட்டுடன்காடு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14.31 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தை நட்புப் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17.16 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளி வகுப்பறை கட்டிடம் ஆகியவற்றை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மேயர் பெ.ஜெகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b