Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 22 நவம்பர் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ‘பேர்வே எண்டர்பிரைசஸ்’ என்ற காலணி தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து 8 கி.மீ, சுற்றளவில் உள்ள நபர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அளிக்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
இரண்டு ஆண்டுக்கு பின்பு, இங்கு 52 பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதில், காலியிடங்களில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் கம்பெனிக்கு நேரில் வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்து. இந்த பணியிடங்களுக்கான நேர்காணலுக்கு நூறு பேர் வருவார்கள் என அந்நிறுவனம் எதிர்பார்த்திருந்ததாக தெரிகிறது.
இதனிடயே, வேலைவாய்ப்பு குறித்து அறிந்த உள்ளூர் இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் மட்டும் அல்லாமல் வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் தங்களது பயோ–டேட்டாவுடன் நிறுவனத்தின் முன்பு ஆயிரக்கணக்கில் குவிந்தனர். ஆயிரக்கணக்கானோர் கூட்டம் கூட்டமாக திரண்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போச்சம்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தொடர்ந்து, அனைவருக்கும் கம்பெனிக்குள் அழைத்து நேர்காணல் வைக்க முடியாத நிலை ஏற்பட, அலுவலகம் முன்பு வைத்தே விண்ணப்பங்களை அந்நிறுவனம் வாங்கியது.
குறைவான ஊதியம் வழங்கினாலும் பராவாயில்லை, அந்த வேலையாயாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருப்பதாக தெரிகிறது. அதோடு, அலுவலகத்தின் வெளியே அவர்கள் விண்ணப்பங்களை பெற்றபோது, அனைவரும் முண்டியடித்துக் கொண்டு தங்கள் பயோடேட்டாவை வழங்கிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி காண்போரை அச்சமடைய செய்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN