Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 22 நவம்பர் (ஹி.ச.)
தமிழக இயற்கை வளங்கள், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் ஊழல் தடுப்புத் துறையின் அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,
ஒன்றிய அரசுக்கு எப்பொழுதெல்லாம் ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் குறுக்கே விழுந்து தமிழ்நாடு அரசின் மீது தேவையில்லாத குற்றச்சாட்டை சுமத்தி ஒன்றிய பாஜக அரசை காப்பாற்றி வருகிறார். அது டிஜிபி விவகாரத்திலும் நடந்திருக்கிறது. ஆளுநர் மூலம் அதிகாரத்தை கைப்பற்றலாம் என்று எண்ணிய எண்ணிய ஒன்றிய பாஜக அரசு அது டிஜிபி மூலம் நடந்துவிடாதா? என்று எண்ணினார்கள். அது இன்றைக்கு டிஜிபி மூலம் நடக்க முடியவில்லை. பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஏன் நிரந்தர டிஜிபி நியமிக்கப்படவில்லை என்று இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார். அவர் ஒன்றை மறந்துவிட்டார்.
தமிழ்நாட்டுக்கு பொறுப்பு டிஜிபி என்பதை அறிமுகப்படுத்தியவர்களே அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினர் தான். 2011ஆம் ஆண்டு ராமானுஜத்தை உளவுத்துறை டிஜிபியாகவும், சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பு டிஜிபியாகவும் நியமித்தது அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு. அதைப்போல ராஜேந்திரனை பொறுப்பு நீதிபதியாக நியமித்ததும் அவர்களதான். ஆக பொறுப்பு நீதிபதி என்பதை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்திய அதிமுக அரசு எடப்பாடி பழனிச்சாமி இன்றைக்கு தமிழ்நாட்டிலே பொறுப்பு டிஜிபி இருக்கலாமா?. நிரந்தர டிஜிபி என்று கேட்பது எந்த எந்த விதத்திலே நியாயம்?.
அவர் ஒன்றிய அரசினுடைய விசுவாசி அடிமை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு உத்தர பிரதேச மாநிலத்தை எடுத்துக் கொண்டிருக்கிறீர்களானால் அங்கே ஐந்து பொறுப்பு டிஜிபிகள் இருந்தும் இன்றைக்கும் பொறுப்பு டிஜிபி தான் உத்தர பிரதேச மாநிலத்திலே இருக்கின்றார்.
எனவே பொறுப்பு டிஜிபியை பற்றி இன்றைக்கு பேசுவதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்தவிதமான அருகதையும் கிடையாது. ஆனால் தமிழ்நாடு அரசை பொறுத்தவரைக்கும் ஜங்கர் ஜிவாலை டிஜிபியாக இருந்த பொழுது தன்னை நீடிக்க வேண்டும் என்று யுபிஎஸ்சிக்கு மனு கொடுக்கிறார். அது தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு ஒரு பட்டியலை அனுப்புகிறது.
அந்த பட்டியலிலே இடம்பெறாத ஒருவர் தான் டிஜிபியாக வரவேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றார். அதனால் காலதாமதம் ஏற்பட்டு அவருடைய கோரிக்கையும் தவிர்க்கப்படுகிறது. பிறகு மீண்டும் ஒரு பட்டியலை யூபிஎஸ்சிக்கு தமிழ்நாடு அரசு கொடுக்கிறது. ஆனால் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாடு விவகாரத்திலே தாங்கள் விரும்பிய டிஜிபியை தான் கொண்டுவர வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்தோடு தமிழ்நாடு அரசு யாரையெல்லாம் கொண்டுவர வேண்டும் என்று விரும்பி கேட்டதோ அவர்களை எல்லாம் மறுக்கிறார்.
எனவேதான் பொறுப்பு டிஜிபி நீடிக்கிறாரே தவிர இன்றைக்கு பொறுத்தவரைக்கும் ஒன்றிய அரசுக்கு நாங்கள் பட்டியல் அனுப்பி இன்னார் என்று கேட்டிருக்கிறோம். அந்த மாநில அரசினுடைய விருப்பத்திற்கேற்ப தான் டிஜிபி அனுமதிக்கப்படுவது வழக்கம். ஆனால் இன்றைக்கு அப்படிப்பட்ட சூழ்நிலை நடைபெறவில்லை என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்னொன்று சொல்ல வேண்டும் என்று சொன்னால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த பொழுது கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை அண்ணா பல்கலை கழகத்தினுடைய துணைவேந்தராக நியமித்தார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b