Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 நவம்பர் (ஹி.ச)
சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக நடைபெற்று வரும் அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்ச்சியானது ஏழுகிணறு பகுதியில் உள்ள அம்மன் கோயில் தெருவில் நடைபெற்றது.
இதில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதான உணவுகளை வழங்கினார். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி நடைபெற்று வரும் அன்னம் தரும் அமுகக்கரங்கள் நிகழ்ச்சியின் 276 ஆவது நாளாக பொதுமக்களுக்கு உணவு வழங்கி வருகிறோம். மக்கள் மகிழ்ச்சியாக உணவுகளை பெற்று உண்ணு வருகிறார்கள் என தெரிவித்தார்.
பஞ்சாங்கத்தின் முறைப்படி திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது குறித்தான கேள்விக்கு,
இதே பாஜக 2021ஆம் ஆண்டு முதல்வருக்கு கட்டம் சரியில்லை அவர் ஆட்சி அமைக்கவே முடியாது எனக் கூறினார்கள். ஆனால் முதலமைச்சர் ஆனார். அன்றிலிருந்து எதிர்த்து நிற்கின்ற அனைவருக்கும் தோல்வியை பரிசாக தந்து கொண்டிருக்கிறார்.
அதே போல 2026 ஆம் ஆண்டும் எதிர்த்து நிற்கின்ற இது போன்ற துருப்பிடித்த பாஜக கூற்றுக்கும், பஞ்சாங்கத்தை மாற்றிக் காட்டக்கூடிய மதிநுட்பம் கொண்டவர் எங்கள் முதல்வர் என தெரிவித்தார்.
கரூர் வெண்ணெய்மலை கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றும் பணிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்தான கேள்விக்கு,
நீதிமன்ற உத்தரவுபடி பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சட்டத்துக்கு உட்பட்டு அனைத்து நிகழ்வுகளும் நடைபெறுகிறது என தெரிவித்தார்.
எஸ்.ஐ.ஆர் பணிகளின் போது தேர்தல் அதிகாரிளை திமுக மிரட்டுவதாக எதிர்கட்சி தலைவர் குற்றச்சாட்டு குறித்தான கேள்விக்கு,
எப்படி அவர்களை மிரட்ட முடியும். அவர்கள் கட்சி சுத்தமாக Filed ல் இல்லை BLA 2 அவர்களெல்லாம் தமிழகம் முழுவதும் போட முடியவில்லை, பாஜகவிலும் அவர்கள் போட முடியவில்லை, வாக்காளர்களுக்கு உதவியாக போவது கூடவா தவறு எனவும் இதில் எப்படி முறைகேடு செய்ய முடியும் எனவும் சொல்லப் போனால் மக்களை விழிப்புணர்வுக்கு ஏற்படுத்த மக்களை உதவுவதற்காக திமுக எப்போதும் போல் வாக்குரிமை பெற்று தருவதும் முன்னிலையில் உள்ளதை பாராட்ட வேண்டும் என தெரிவித்தார்.
துணை முதலமைச்சர் அறிவால் அந்த பதவிக்கு வர வில்லை அவரது தந்தை முதலமைச்சர் என்பதால் பதவிக்கு வந்தார் என்று தமிழிசை சௌந்தரராஜன் பேசியது குறித்தான கேள்விக்கு,
கடுமையான உழைப்பாளி அவர், தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுமென்றால் தந்தையின் பெயருக்காக பதவியை பெற்றிருக்கலாம். எங்கள் முதல்வர் துணை முதல்வரை களத்திற்கு கொண்டு வந்த நாள் முதல் இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என்றாலும் சரி, 5 லட்சம் புதிய இளைஞர்களை கொண்டு வருவதாலும் சரி, பல்வேறு வகையில் அவர் பணி ஆற்றி வருகிறார்.
துணை முதலமைச்சர் அவர்களுக்கு எல்லா தகுதியும் இருக்கிறது. தமிழிசை போல் தந்தையாரால் அவருக்கு தகுதி கிடைக்கவில்லை. உழைப்பால் இந்த தகுதியை தமிழக முதல்வர் தந்து கொண்டிருக்கிறார் என கூறினார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னாள் செய்தியாளர் சந்திப்பின் போது நீங்கள் தொலைபேசியில் பேசியது யாரோடு என்ற கேள்விக்கு,
அது சொல்ல முடியாதுல அது ரகசியம் என பதில் அளித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ