200 டிகிரி கோணத்தில் படம் பார்க்க புதிய புரொஜெக்டர்!
சென்னை, 22 நவம்பர் (ஹி.ச.) ஸெப்ரானிக்ஸ் நிறுவனம் பிக்ஸாபிளே 63 என்ற புதிய புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது. 200 டிகிரி கோணம் வரை சாய்த்து திரை அனுபவத்தைப் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புரொஜெக்டர், 381 செ.மீ. வரை திரையை விரிவாக்கம் செய்ய
200 டிகிரி கோணத்தில் படம் பார்க்க புதிய புரொஜெக்டர்!


சென்னை, 22 நவம்பர் (ஹி.ச.)

ஸெப்ரானிக்ஸ் நிறுவனம் பிக்ஸாபிளே 63 என்ற புதிய புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது.

200 டிகிரி கோணம் வரை சாய்த்து திரை அனுபவத்தைப் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புரொஜெக்டர், 381 செ.மீ. வரை திரையை விரிவாக்கம் செய்யும் திறன் கொண்டது.

இதனால், வீட்டிலேயே தியேட்டரில் அமர்ந்து படம் பார்க்கும் அனுபவத்தை இந்த புரொஜெக்டர் வழங்கும் என ஸெப்ரானிக்ஸ் நம்பிக்கை அளிக்கிறது.

குவாட் கோர் புராசஸர் கொண்ட இந்த புரொஜெக்டர், 5000 லூமென்ஸ் பிரகாசம் கொண்டது. 30 ஆயிரம் மணி நேரம் பிரகாசிக்கும் வகையிலான எல்.இ.டி.,யைக் கொண்டுள்ளது.

யூஎஸ்பி, எச்.டி.எம்.ஐ., புளூடூத் வாயிலாக இணைப்புகளைக் கொடுக்கலாம். ஸ்மார்ட்போனில் இருந்தவாரு ஸ்கிரீன் மிரரிங் மூலம் திரை அனுபவத்தைப் பெறலாம்.

ஒலி அளவைக் கட்டுப்படுத்த தனியாக ரிமோட் வழங்கப்பட்டுள்ளது. இதனால், இருந்த இடத்திலிருந்தே புரொஜெக்டர் பயன்பாட்டில் மாற்றங்களை செய்துகொள்ளலாம்.

புரொஜெக்டரில் செயலிகளுக்கான நினைவகம் கொடுக்கப்பட்டுள்ளதால், ஓடிடி செயலிகளை தரவிறக்கம் செய்து அதன் மூலம் படங்களைப் பார்க்கலாம்.

Hindusthan Samachar / JANAKI RAM