Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 22 நவம்பர் (ஹி.ச.)
வருங்கால வைப்புநிதி நிறுவனம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில், ‘வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் 2.0’ என்ற குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து நெல்லை வருங்கால வைப்புநிதி ஆணையாளர் சிவசண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வருங்கால வைப்புநிதி நிறுவனம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில், ‘வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் 2.0’ என்ற குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ம் தேதி, வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர் நேரு நகரில் உள்ள நேரு நர்சிங் கல்லூரியிலும், தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி எஸ்.வி.நகரில் உள்ள எஸ்.வீராசாமி செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் உள்ள அன்னம்மாள் மகளிா் கல்வியியல் கல்லூரியிலும் வருங்கால வைப்புநிதி கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் வருங்கால வைப்புநிதி நிறுவனம், தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்ந்த உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழில் அதிபர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் நிறுவன அமைப்புகள் கலந்து கொண்டு, தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM