பொள்ளாச்சி-வால்பாறை சாலை அகலப்படுத்தும் பணி தீவிரம்
கோவை, 22 நவம்பர் (ஹி.ச.) கோவை மாவட்டத்தில் பிரதான சுற்றுலா தளமாக விளங்கும் வால்பாறைக்கு செல்லும் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் பகல் மற்றும் இரவு நேரத்திலும் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. இந்த சாலையிலிருந்து பல்வேறு கிராமங்கள் பிரிந்து
பொள்ளாச்சி-வால்பாறை சாலை அகலப்படுத்தும் பணி தீவிரம்


கோவை, 22 நவம்பர் (ஹி.ச.)

கோவை மாவட்டத்தில் பிரதான சுற்றுலா தளமாக விளங்கும் வால்பாறைக்கு செல்லும் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் பகல் மற்றும் இரவு நேரத்திலும் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது.

இந்த சாலையிலிருந்து பல்வேறு கிராமங்கள் பிரிந்து சென்றதாலும் அந்த வழியாக சுற்றுலா வாகனங்களே அதிகளவு சென்று வருகிறது.

சுமார் 10 ஆண்டுக்கு முன்பு வரை, பொள்ளாச்சி நகரில் துவங்கி ஆழியார் வரையிலும் சுமார் 23 கிமீ தூரத்தில் வால்பாறை சாலையின் பெரும் பகுதி குறுகாலாக இருந்தது.

சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பிரதான சாலை என்பதால், வாகனங்கள் ஒன்றுகொண்டு போட்டி போட்டு முந்தி செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்பட்டதுடன், உயிரிழப்பும் அதிகமானது.

இந்நிலையில் சுற்றுலா வாகனங்கள் அதிகம் செல்லும் பகுதியில் ஒன்றான வால்பாறை ரோட்டில் நா.மூ.சுங்கத்திலிருந்து ஆழியார் வரையிலும், அகலப்படுத்தாத பகுதிகளை கணக்கெடுத்து, அப்பகுதியில் அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி, தற்போது 7 மீட்டர் அகலத்தில் உள்ள சாலையின் இருபுறமும் தலா ஒன்றரை மீட்டர் அகலப்படுத்தி மொத்தம் 10 மீட்டர் அகலத்தில் இருவழித்தடன் சாலை ஓரம் நடந்து செல்லும் அளவிற்கு பாதை ஏற்படுத்தும் பணி துவங்கப்பட்டது.

அதிலும், மேடு பள்ளமான சில இடங்களில் அதற்கேற்ப சமப்படுத்தி அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணியில் சுமார் 50க்கும் மேற்பட்டதொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வால்பாறைரோட்டை முழுமையாக அகலப்படுத்தி பயன்பாட்டிற்கு வரும்போது, வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் எந்தவித சிரமமின்றி விரைந்து செல்வதுடன், விபத்து உள்ளிட்ட அசம்பாவிதன சம்பவம் நடைபெறுவது கட்டுப்படுத்தப்படும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b