Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 22 நவம்பர் (ஹி.ச.)
இலங்கை முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமானின் இல்ல விழா திருப்பத்தூரில் நாளை (நவ 23) நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் பங்கேற்க இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே தனது மனைவியுடன் இன்று
(நவ 22) காலை விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வருகை புரிந்தார்.
விமான நிலையத்திலிருந்து காரில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு விக்ரமசிங்கே மற்றும் அவரது மனைவி ஆகியோர் வந்தனர். அவர்கள் இருவரையும் வரவேற்ற கோவில் நிர்வாகத்தினர், அவர்களை அம்மன் சன்னதி வழியாக கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள சன்னதிகளில் விக்ரமசிங்கே தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.
தரிசனத்தை நிறைவு செய்துவிட்டு வெளியே வந்தபோது அவரிடம் கச்சத்தீவு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் எதுவும் அளிக்காமல் விக்ரமசிங்கே ஏறி புறப்பட்டுச் சென்றார்.
Hindusthan Samachar / vidya.b