நவம்பர் 24 முதல் சேலம் - ஈரோடு மெமு ரயில் சேவை தொடக்கம்!
சேலம், 22 நவம்பர் (ஹி.ச.) சேலம் - ஈரோடு இடையே ''மெமு'' ரயில் சேவை நாளை மறுநாள் (நவம்பர் 24) முதல் தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது. சேலம் - ஈரோடு இடையே பயணிகள் ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பல்வேறு
Train NFR


சேலம், 22 நவம்பர் (ஹி.ச.)

சேலம் - ஈரோடு இடையே 'மெமு' ரயில் சேவை நாளை மறுநாள் (நவம்பர் 24) முதல் தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.

சேலம் - ஈரோடு இடையே பயணிகள் ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் சேலம் கோட்டம் ரயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்ற ரயில்வே கோட்டம், சேலம் - ஈரோடு ரயில் சேவையை தொடங்க தேவையான திட்ட அறிக்கை ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பித்தது.

இந்த நிலையில், சேலம் - ஈரோடு இடையே மெமு ரயில் சேவைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இந்த ரயில் வருகிற 24 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

சேலம் - ஈரோடு மெமு பயணிகள் ரயில், வாரத்தில் வியாழக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் காலை 6.15 மணிக்கு கிளம்பி மகுடஞ்சாவடிக்கு 6.29 மணிக்கும், 6.49 மணிக்கு சங்ககிரிக்கும், காவேரி ஸ்டேஷனுக்கு 7.04 மணி மற்றும் ஈரோடு ஜங்ஷனுக்கு 7.25 மணிக்கும் சென்றடையும்.

மறு மார்க்கத்தில் ஈரோடு - சேலம் மெமு பயணிகள் ரயில் வியாழக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, காவிரி ஸ்டேஷனுக்கு 7.38 மணிக்கும், சங்ககிரி நிலையத்திற்கும் 7.54-க்கும், மகுடஞ்சாவடிக்கு 8.09 மணிக்கும், இறுதியாக சேலம் ஜங்ஷனுக்கு 8.45 மணிக்கும் வந்து சேரும்.

இந்த மெமு ரயிலில் எட்டு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN