தமிழகத்தில் இருந்து பனாரசுக்கு காசி தமிழ் சங்கமம் 4.0-ஐ முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கம்
சென்னை, 22 நவம்பர் (ஹி.ச.) காசி தமிழ் சங்கமம் 4.0-ஐ முன்னிட்டு, கூட்ட நெரிசலை தவிர்க்க தமிழகத்தில் இருந்து பனாரசுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
வரும் 29-ந் தேதி முதல் டிசம்பர் 17-ந் தேதி வரை தமிழகத்தில் இருந்து பனாரசுக்கு காசி தமிழ் சங்கமம் 4.0-ஐ முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கம்


சென்னை, 22 நவம்பர் (ஹி.ச.)

காசி தமிழ் சங்கமம் 4.0-ஐ முன்னிட்டு, கூட்ட நெரிசலை தவிர்க்க தமிழகத்தில் இருந்து பனாரசுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

கன்னியாகுமரி - பனாரஸ் இடையே சிறப்பு ரெயில் (வண்டி எண்கள் 06001/06002) இயக்கப்படுகிறது.

கன்னியாகுமரியில் இருந்து வரும் 29-ந் தேதி பகல் 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் அடுத்த 3-வது நாள் இரவு 11.15 மணிக்கு பனாரசை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் பனாரசில் இருந்து டிசம்பர் 5-ந் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், அடுத்த 4-வது நாள் பகல் 11.30 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடைகிறது.

இதே போல், சென்னை சென்டிரலில் இருந்து டிசம்பர் 2-ந் தேதி காலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06003) மறுநாள் இரவு 11.15 மணிக்கு பனாரசை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், பனாரசில் இருந்து டிசம்பர் 7-ந் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06004), 3-வது நாள் இரவு 11.30 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடைகிறது.

மேலும், கோவையில் இருந்து டிசம்பர் 3-ந் தேதி மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06005), 3-வது நாள் இரவு 11.15 மணிக்கு பனாரசை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், பனாரசில் இருந்து டிசம்பர் 9-ந் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06006), 4-வது நாள் காலை 8.30 மணிக்கு கோவையை சென்றடைகிறது.

இதே போல், சென்னை சென்டிரலில் இருந்து டிசம்பர் 6-ந் தேதி காலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06007) மறுநாள் இரவு 11.15 மணிக்கு பனாரசை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், பனாரசில் இருந்து டிசம்பர் 11-ந் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06008) அடுத்த 3-வது நாள் இரவு 11.30 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடைகிறது.

மேலும், கன்னியாகுமரியில் இருந்து டிசம்பர் 7-ந் தேதி பகல் 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06009) 3-வது நாள் இரவு 11.15 மணிக்கு பனாரசை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், பனாரசில் இருந்து டிசம்பர் 13-ந் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06010) 3-வது நாள் பகல் 11.30 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடைகிறது.

அதே போல், கோவையில் இருந்து டிசம்பர் 9-ந் தேதி மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06013) 3-வது நாள் இரவு 11.15 மணிக்கு பனாரசை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், பனாரசில் இருந்து டிசம்பர் 15-ந் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06014) 4-வது நாள் காலை 8 மணிக்கு கோவையை சென்றடைகிறது.

மேலும், சென்னை சென்டிரலில் இருந்து டிசம்பர் 12-ந் தேதி காலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06015) மறுநாள் இரவு 11.15 மணிக்கு பனாரசை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், பனாரசில் இருந்து டிசம்பர் 17-ந் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06016) 3-வது நாள் இரவு 11.30 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடைகிறது.

இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM