Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 22 நவம்பர் (ஹி.ச.)
தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு பொது நிகழ்வுகளில் விஜய் பங்கேற்காமல் இருந்து வந்தார். இதற்கிடையே, கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சென்னை மாமல்லபுரத்துக்கு நேரில் வரவழைத்து ஆறுதல் கூறினார்.
கரூர் சம்பவத்திற்கு பின்னர் நாளை (நவ 22) காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் முடிவு செய்துள்ளார். இதற்காக கல்லூரி வளாக உள் அரங்கத்தில் போதுமான அளவு இருக்கைகளும், தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. காலை 10 மணிக்கு இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் நாளை தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையில் உள்ள முருகன் கோவிலில் ஆனந்த் இன்று (நவ 22) சாமி தரிசனம் செய்தார்.
Hindusthan Samachar / vidya.b