Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 நவம்பர் (ஹி.ச.)
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடந்த செப்.27-ம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதன் பிறகு பொது நிகழ்வுகளில் விஜய் பங்கேற்காமல் இருந்து வந்தார்.
இதனிடையே, கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சென்னைக்கே அழைத்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து, கரூர் சோகத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த விஜய், அண்மையில் கட்சியின் சிறப்பு பொதுக்குழுவை கூட்டினார். இதையடுத்து மீண்டும் மக்கள் சந்திப்புக்கு அவர் ஆயுத்தமானார்.
இதற்காக தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் பேரை தேர்வு செய்து ‘மக்கள் பாதுகாப்புப் படை’யை உருவாக்கினார். அவர்களுக்கு ராணுவம் மற்றும் காவல்துறையில் ஓய்வுபெற்ற அதிகாரிகளை கொண்டு பயிற்சியும் அளித்தார்.
இதற்கிடையே, நாளை
(நவ 22) காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் முடிவு செய்துள்ளார்.
இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது,
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (23.11.2025) ஞாயிற்றுக்கிழமை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2000 பேர் மட்டுமே இந்த உள்ளரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கழகத் தோழர்களும் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b