9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஒழுங்குமுறை விற்பனை கூட எடைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம், 22 நவம்பர் (ஹி.ச.) பணி நிரந்தரம், மருத்துவ காப்பீடு, இயற்கை மரண இழப்பீடு, ஓய்வூதியம், உயிரற்ற தொழிலாளிகளுக்கு வீட்டு மனை உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில்
போராட்டம்


விழுப்புரம், 22 நவம்பர் (ஹி.ச.)

பணி நிரந்தரம், மருத்துவ காப்பீடு, இயற்கை மரண இழப்பீடு, ஓய்வூதியம், உயிரற்ற தொழிலாளிகளுக்கு வீட்டு மனை உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் தமிழ்நாடு ஒழுங்கு முறை விற்பனை கூட எடைப்பணி தொழிலாளர் சங்கத்தினர்,

100க்கும் மேற்பட்டோர் அச்சங்கத்தின் பொதுசெயலாளர் சரவணன் தலைமையில் கண்டன கோஷங்களை எழுப்பி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கோரிக்கைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

Hindusthan Samachar / Durai.J