Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 22 நவம்பர் (ஹி.ச.)
கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் அரசு மேல்நிலை பள்ளியில் சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இதில் இந்த வருடம் 12ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் சுமார் 200 மேற்பட்டோர் உள்ள நிலையில் அக்கவுண்டன்சி மற்றும் வேதியல் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் சாந்தி மற்றும் சத்யா ஆகியோர் திடீரென பணியிட மாற்றம் செய்யபட்டுள்ளனர்.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் ஆசிரியர்கள் மாற்றப்பட்டதால் மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளதாகவும் நல்ல முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் மாற்றத்தின் காரணமாக மிகவும் பாதிக்கபட்டு உள்ளதாக கூறியவர்கள் பணிமாற்றம் செய்யபட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்து சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர்.
மேலும் தங்களது கல்வியின் நலன் கருதி மீண்டும் அவர்கள் அதே பள்ளியில் பணி செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
Hindusthan Samachar / V.srini Vasan