Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 22 நவம்பர் (ஹி.ச.)
கோவை மாவட்டம் நீலாம்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய ஜவுளி சங்கத்தின் 78-வது தேசிய அளவிலான மாநாடு மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.
எல்.எம்.டபிள்யூ (LMW) நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்சய் ஜெயவர்தன வேலு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இவ்விழாவில், ஜவுளி உற்பத்தியில் உலக அளவில் சிறந்து விளங்கிய மற்றும் அதிக உற்பத்தி செய்த தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டன.
பின்னர், மாநாட்டின் ஆண்டு அறிக்கை வாசிக்கப்பட்டது. அதில் முக்கியமாக, பாலியஸ்டர் மற்றும் ரையான் நூல்களுக்கான (Polyester and Rayon Yarns) ஜி.எஸ்.டி. வரி குறைப்பு செய்யப்பட்டதால், ஒட்டுமொத்த ஜவுளித் துறையும் புத்துயிர் பெற்றிருப்பதாகவும்,லாபம் மற்றும் முதலீடுகள் அதிகரிப்புஇந்த வரிச் சீர்திருத்தத்தின் விளைவாக, ஜவுளி உற்பத்தியாளர்கள் பெருமளவில் லாபம் ஈட்டியுள்ளதுடன், சர்வதேச அளவில் வெளிநாட்டு முதலீடுகளும், வர்த்தகமும் அதிகரித்துள்ளதாக இந்திய ஜவுளி சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / V.srini Vasan