Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 22 நவம்பர் (ஹி.ச.)
கோவை நகர் பகுதியில் சேகாரமாகும் குப்பை வெள்ளலூர் கிடங்கில் கொட்டப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதற்கு முன் நடந்த வழக்கில் 2018 அக்டோபர் 3 தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்தவில்லை, வெள்ளலூர் சுற்றுவட்டார பகுதிகள் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு குறிச்சி வெள்ளலூர் மாசு கட்டுப்பாட்டு குழுவினர் கடிதம் எழுதி உள்ளனர்.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஆய்வு செய்தனர். அவர்களுடன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் மாநகராட்சி அதிகாரிகள் வந்தனர்.
பத்தாண்டுகளுக்கு மேலாக குப்பை தேங்கி வைத்து இருப்பது எம்.சி.சி பிளான்ட் செயல்படாமல், இருப்பதை அறிந்தனர். நிலத்தடி நீரின் உப்புத் தன்மை மாறி இருப்பது காற்று மாசு அடைந்து இருப்பது கண்டறிந்தனர்.
குப்பை மேலாண்மையை மேம்படுத்த என்ன ? செய்ய வேண்டும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழிமுறை வழங்கியது. இதன் நகல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டு பெற்று உள்ளனர்.
அதில் வெள்ளலூர் 9 லட்சம் கியூபிக் டன் பழைய குப்பை தேங்கி உள்ளது. தரம் பிரிக்காமல், கிடந்து இருக்கு குப்பைகள் இருந்து வருகிறது.
தினமும் 110 டன் திறந்தவெளியில் கொட்டப்படுகிறது. பழைய குப்பையில் வெளியேறும் கழிவுநீர் நிலத்துக்குள் சென்றதால் நிலத்தடி நீர் பால் பட்டு உள்ளது. நான்கு இடங்களில் காற்று மாசு சோதனை செய்யப்பட்டது. இரண்டு இடங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்த அளவை விட காற்று மாசு அதிகமாக உள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் மாநகராட்சி பெற்று உள்ள அனுமதி 2019 மார்ச் 31 இல் காலாவதி ஆகிவிட்டது. காய்கறி கழிவில் உரம் தயாரிக்கும் மையம் சிறிய அளவில் எரிவாயு தயாரிக்கும் மையம் அனுமதி இன்றி செயல்படுகின்றன.
9.40 லட்சம் கியூபிக் கண் பழைய குப்பை கிடங்கில் வளாகத்தில் மூன்று இடங்களில் குவித்து வைக்கப்பட்டதில், 70 ஆயிரம் டன் மட்டுமே பயோ மைனிங் முறையில் அளிக்கப்பட்டு உள்ளது.
திடக்கழிவு மேலாண்மை விதிகளின் நடைமுறையில் பெரும்பாலவற்றை மாநகராட்சி பின்பற்றவில்லை என்றும், அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Hindusthan Samachar / V.srini Vasan