இளைஞர் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
நெல்லை, 22 நவம்பர் (ஹி.ச.) காவல்கிணறு, பூஞ்சோலை தெருவைச் சேர்ந்த ஆரோக்கியரமேஷ் (27), வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் தொழில் செய்து வந்துள்ளார். இவர், காவல்கிணறு பகுதியைச் சேர்ந்த முத்துநாயகம் என்பவரது மகன் அரசன் மற்றும் அவரது மைத்துனர் பிரிட்டோ
Tirunelveli Court


நெல்லை, 22 நவம்பர் (ஹி.ச.)

காவல்கிணறு, பூஞ்சோலை தெருவைச் சேர்ந்த ஆரோக்கியரமேஷ் (27), வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் தொழில் செய்து வந்துள்ளார்.

இவர், காவல்கிணறு பகுதியைச் சேர்ந்த முத்துநாயகம் என்பவரது மகன் அரசன் மற்றும் அவரது மைத்துனர் பிரிட்டோ ஆகியோரை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பியுள்ளார்.

ஆனால், அங்கு அவர்களுக்கு முறையான வேலையோ அல்லது ஒப்பந்தப்படி சம்பளமோ வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக, 2014-ம் ஆண்டு அக்டோபர்

25-ம் தேதி, ஆரோக்கிய ரமேஷின் கடையில், காவல்கிணறைச் சேர்ந்த முத்து நாயகம் மகன் எடிசன் மற்றும் அவரது நண்பரான ஞானதிரவியம் மகன் கிங்ஸ்டன் என்ற இருதய கிங்ஸ்டன் ஆகியோர் தகராறில் ஈடுபட்டு பணத்தை கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்நிலையில், அக்டோபர் 27-ம் தேதி இரவு, ஆரோக்கிய ரமேஷ் தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, எடிசன், கிங்ஸ்டன் மற்றும் நாகர்கோவில் காட்டுப்புதூரைச் சேர்ந்த நடராஜன் மகன் பாபு ஆகியோர் வழிமறித்து அரிவாள் மற்றும் கம்புகளால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த ஆரோக்கிய ரமேஷ், நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 2014-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி உயிரிழந்தார்.

இந்த கொலை வழக்கு, திருநெல்வேலி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி செல்வம் முன்னிலையில் நடந்து வந்தது.

அரசு தரப்பில் வழக்கறிஞர் கருணாநிதி வாதாடினார்.

விசாரணை முடிவில், குற்றவாளிகளான எடிசன், கிங்ஸ்டன் மற்றும் பாபு ஆகிய மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN