Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 22 நவம்பர் (ஹி.ச.)
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தேர்தல்களை தில்லுமுல்லு இல்லாமல் வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரக் ஓ பிரைன் வலியுறுத்தி இருக்கிறார்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான டெரிக் ஓ பிரைன் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது,
கடந்த இரண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், சமாஜ்வாடி, திமுக, ஆம் ஆத்மி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், சிவசேனா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் பிற எதிர்க்கட்சிகள் தேர்தல் செயல்முறை தில்லுமுல்லு இல்லாமல் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி 100க்கும் மேற்பட்ட நோட்டீஸ்களை தாக்கல் செய்தனர்.
எந்த விதியின் கீழ் விவாதம் நடத்தப்படும் என்பது குறித்து எதிர்க்கட்சிகள் கவலைப்படுவதில்லை. பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணியை , 74 ஆண்டு கால பொதுத் தேர்தல்கள் -இந்தியாவின் நீடித்த ஜனநாயக உணர்வை கொண்டாடுதல் என்ற தலைப்பில் ஒரு அறிவிப்பை பற்றி விவாதிக்கவிடாமல் தடுத்தது எது? தேர்தல் ஆணையத்தின் பட்ஜெட் நாடாளுமன்ற ஒப்புதலுக்கு உட்பட்டது மற்றும் சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் மூலம் ஒன்றிய அரசினால் சமர்ப்பிக்கப்படுகின்றது.
இதன் பொருள் நாடாளுமன்றம் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை வைத்திருப்பதன் மூலமாக அதை ஆராய்ந்து விவாதிக்கும் அதிகாரம் பெற்றது. தேர்தல் ஆணையத்தின் பட்ஜெட்டை அங்கீகரிக்கும் எம்பிக்களுக்கு அது குறித்து விவாதிப்பதற்கு உரிமை இல்லை என்று அரசு கூறும்போது, அது நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை மீறுவதாகும்.
பட்ஜெட் மற்றும் மழைக்கால கூட்டத்தொடரில் மோடி அரசு இந்த விவகாரம் குறித்து விவாதத்தில் ஈடுபடுவதற்கு மறுத்துவிட்டது. வரவிருக்கும் குளிர்காலக் கூட்டத்தொடரில் தேர்தல் ஆணையம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மீண்டும் வலியுறுத்தும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b