Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 23 நவம்பர் (ஹி.ச.)
கோவை, காந்திபுரம் நகர பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இங்கு இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.
இந்நிலையில் மதுபோதையில் பேருந்து நிலையத்தில், பேருந்துகள் திரும்பும் பகுதியில் உள்ள சாலையில் படுத்து உறங்கினார்.
இதனை பேருந்துக்காக வந்த பயணிகள் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர்.
மேலும் சிலர் அவரை பேருந்து மோதி உள்ளதாக நினைத்து கொண்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
முதலில் அவரே எழுந்து விடுவார் என்று பலரும் எண்ணிய நிலையில், அவர் எழுந்திரிக்காமல் உறங்கி கொண்டே இருந்ததார்.
மேலும் அங்கு பணியில் இருந்து தமிழ்நாடு போக்குவரத்து டிக்கெட் பரிசோதவர்கள் மற்றும் ஊழியர்கள் காந்திபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை எழுப்ப முற்பட்டனர்.
அப்போது அவர் அதிக மது போதையில் இருந்ததாலும் அவரால் எழுந்திருக்க முடியவில்லை, இந்நிலையில் அருகில் உள்ள கடையில் இருந்து குடிநீர் பாட்டில் வாங்கி வந்து தண்ணீரை ஊற்றி எழுப்ப முயன்றனர் காவல் துறையினர்,
ஆனாலும் எழுந்திருக்க முடியாத நிலையில் படுத்து இருந்தார். இதனை அடுத்து அப்பகுதி உள்ள கடை ஊழியர்களை அழைத்து வந்து அவரை அங்கு இருந்து தூக்கிக் கொண்டு பேருந்து நிலையத்திற்குள் படுக்க வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Hindusthan Samachar / V.srini Vasan