Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 நவம்பர் (ஹி.ச.)
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 10 ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
10.12.2025 புதன் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிஅழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுகவில் மிக மூத்த தலைவரான செங்கோட்டையன் நீக்கத்திற்கு பிறகு நடைபெறும் முதல் பொதுக்குழு என்பதால், அதிமுக உள்கட்சி விவகாரங்கள் குறித்து பேசப்படலாம் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b