கோவையின் மற்றொரு அடையாளம் 23 வகை பூக்களுடன் உருவான செம்மொழி பூங்கா
கோவை, 23 நவம்பர் (ஹி.ச.) கோவையில் 2010 ஆம் ஆண்டு கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அப்போதைய முதலமைச்சர் பேசும் பொழுது 165 ஏக்கரில் செம்மொழிப் பூங்கா ஒன்று அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். 10 ஆண்டுகள் கழித்து 2021 ஆம் ஆ
Another landmark of Coimbatore is the Semmozhi Park, created with 23 varieties of flowers.


Another landmark of Coimbatore is the Semmozhi Park, created with 23 varieties of flowers.


கோவை, 23 நவம்பர் (ஹி.ச.)

கோவையில் 2010 ஆம் ஆண்டு கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் அப்போதைய முதலமைச்சர் பேசும் பொழுது 165 ஏக்கரில் செம்மொழிப் பூங்கா ஒன்று அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.

10 ஆண்டுகள் கழித்து 2021 ஆம் ஆண்டு ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக செம்மொழி பூங்கா காண பணிகளை முன்னெடுத்தது கோவை வ உ சி பூங்கா மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோவை காந்திபுரம் சிறைச்சாலைக்கு சொந்தமான இடத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார் இதை அடுத்து அங்கு 165 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு முதல் கட்டமாக 45 ஏக்கரில் செம்மொழி பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கினர் செம்மொழிப் பூங்கா பணிகளை கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டை தொடங்கி வைத்தார்.

இந்த பணிக்காக தொடக்கத்தில் 127.25 கோடி ஒதுக்கப்பட்டது அதன் பின்னர் கூடுதலாக 47 கோடி ஒதுக்கீடு செய்து மொத்தம் 214 . 25 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கி வேலை எடுத்து நடந்து வருகிறது.

பூங்காவுக்குள் நுழைந்தது நம்மை பிரமாண்டமான மலைக்குன்று வரவேற்கின்றது மலைக்குன்றிலிருந்து நீர்வீழ்ச்சி ஏற்படுத்தி தண்ணீர் உள்ளது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பூங்காவில் வெவ்வேறு பகுதிகளில் கடையெழுது சிலைகளுக்கள் வைக்கப்பட்டுள்ளது.

செம்மொழிப் பூங்காவில் எண்ணற்ற மற்றும் எல்லா வகையில் சுற்றுலாப் பயணிகள் மக்கள் கவரும் வகையில் செம்மொழி வனம் மகரந்த மனம் மூலிகை வனம், நீர் வனம், நட்சத்திர வனம், நகர் தரும் மணம் நறுமண வனம் என 23 விதவிதமான தோட்டங்கள் ஆயிரம் வகையான ரோஜாக்கள் இடம் பெற்றுள்ளது.

அதேபோன்று தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அறிய வகை மரங்கள் கொண்டு வரப்பட்டு பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மரங்கள் சுற்றுச்சூழலை பேணிக்காப்பதுடன் பல வண்ண பூக்களின் இந்த மரங்கள் பூக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பூங்காவில் ஒரு பகுதி 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட செயற்கை நீர் ஊற்றம் அமைக்கப்பட்டு வருகிறது செயற்கை நீரோட்டத்தில் இருந்து தண்ணீர் விழக்கூடிய காட்சிகள் பூங்காவின் வரக்கூடிய மக்கள் அமர்ந்து ரசிக்கும் பார்க்கும் வகையில் திறந்தவெளி அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர மக்களின் பொழுதுபோக்கு தளமாகவும் கோவையில் மற்றொரு அடையாளமாக உள்ள செம்மொழிப் பூங்காவை வருக 26ஆம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்துள்ளார்.

அன்றைய தினம் முதல் செம்மொழிப் பூங்காவுக்கு மக்கள் சென்று இயற்கை காட்சிகள் தோட்டங்கள் உள்ளற்றை பார்வையிட்டு கண்டு ரசிக்க தங்கள் பொழுதைக் கழிக்கலாம் கோவை மாநகரில் வாழும் மக்கள் தங்களது வார விடுமுறை நாட்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பயன்படுத்தும் குளம் வ உ சி உயிரியல் பூங்கா வ உ சி மைதானம் பல்வேறு இடங்களுக்கு சென்று பொழுதைப் போக்கி வந்தனர்.

தற்போது செம்மொழி பூங்கா அமைய உள்ள கோவை மாநகர மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைய உள்ளது

Hindusthan Samachar / V.srini Vasan