Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 23 நவம்பர் (ஹி.ச.)
கோவை குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில் 'என்றென்றும் ஜமுக்காளம்' எனும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பவானி ஜமுக்காளத்தின் சிறப்பு, பாரம்பரியம் மற்றும் தனித்துவத்தை போற்றும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களின் கலைத்திறனை பாராட்டும் விதமாகவும் 'ஸ்டுடியோ ஏ' நிறுவனத்தின் நிறுவனர் அமர் ரமேஷ் எழுதிய பவானி ஜமுக்காளம் எனும் புத்தகத்தை வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் பவானி பகுதியை சேர்ந்த பல்வேறு நெசவாளர்கள் பங்கேற்றனர்.
ஜவுளி துறை திறன் மேம்பாட்டு கழகத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்வப்னா மிஸ்ரா அவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்று, கே.ஆர்.நாகராஜன் அவர்களிடம் இருந்து முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் ஜமுக்காளம் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டு முன்பு ஜமுக்காளம் இதற்கெல்லாம் பயன்படுத்தப்பட்டது தற்பொழுது அதன் பயன்பாடு எவ்வாறு உள்ளது அதில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
என்பதை எல்லாம் பற்றி விவரித்தனர் மேலும் இது பற்றி முழு விவரங்கள் அந்த புத்தகத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / V.srini Vasan