Enter your Email Address to subscribe to our newsletters

குஜராத், 23 நவம்பர் (ஹி.ச.)
சிறப்பு தீவிர திருத்தம் (SIR) திட்டத்தின் ஒரு பகுதியாக குஜராத்தில் பூத் நிலை அதிகாரிகள் (BLO) மற்றும் BLO உதவியாளர்கள் மீது கடுமையான பணி அழுத்தம் உள்ளது.
இந்த அழுத்தத்தின் கீழ்தான் வதோதராவில் BLO உதவியாளர் உஷாபென் இந்திரசிங் சோலங்கி பணியின் போது இறந்தார்.
கடந்த நான்கு நாட்களில் மாநிலம் முழுவதும் நான்கு BLO / BLO உதவியாளர்கள் மரணம் அடைந்தது கவலைக்குரியது.
உஷாபென் சோலங்கி கோவா மகளிர் ITI-யில் எழுத்தராக பணிபுரிந்து வந்தார்.
மேலும் BLO உதவியாளர் கடமைகளையும் செய்து வந்தார்.
அவரது உடல்நிலை சரியில்லை என்றும், BLO பொறுப்புகளில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும் என்றும் குடும்பத்தினர் அதிகாரிகளிடம் முன்பு கூறியதாக கூறப்படுகிறது.
மேலும்,அவர் பணியில் தொடர்ந்ததாக குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதிகாரிகள் பரிசோதனைக்கு வருவதற்கு முன்பே உஷாபென் உடல் நலக்குறைவாகியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரை சயாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள்
தெரிவித்தனர்.
இது தொடர்பாக உஷாபென்னின் கணவர் இந்திரசிங் சோலங்கா கூறியதாவது,
அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆனால் அவர் BLO பணிகளில் இருந்து விடுவிக்கப்படவில்லை. அதுதான் விபத்துக்கான காரணம்.
இப்போது குடும்ப உறுப்பினர்கள் ஒரே ஊழியர் மீது இரண்டு பணிகளின் சுமையை சுமத்துவது நியாயமற்றது என்றார்.
குஜராத்தில் கடந்த 4 நாட்களில் 4
BLO -க்கள் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறந்த BLO-க்கள் விவரம்:
1. கிர் சோம்நாத் -
அரவிந்த் வதேரு
2. ரமேஷ்பரம்
(கேது மாவட்டம்)
3. கல்பனாபென் படேல்
(தபி மாவட்டம்)
4. - உஷாபென் சோலங்கி (வதோதரா)
Hindusthan Samachar / Durai.J