மயிலாப்பூரில் ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான பெரியநாயகி உடனுறை வாலீஸ்வரர் திருக்கோயில் திருகுடமுழக்கு நன்னீராட்டு திருவிழா
சென்னை, 23 நவம்பர் (ஹி.ச) சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் திருக்கோயில் உப கோயிலாகிய ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான பெரியநாயகி உடனுறை வாலீஸ்வரர் திருக்கோயில் திருகுடமுழக்கு நன்னீராட்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவில் திருப்பணி வேலைகள்
Myl


சென்னை, 23 நவம்பர் (ஹி.ச)

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் திருக்கோயில் உப கோயிலாகிய ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான பெரியநாயகி உடனுறை வாலீஸ்வரர் திருக்கோயில் திருகுடமுழக்கு நன்னீராட்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோவில் திருப்பணி வேலைகள் அனைத்தும் முடிவு பெற்று திருக்குடமுழக்கு நன்னீராட்டு விழாவிற்காக 20 ஆம் தேதி மாலை 4 மணிக்கு யாகசாலை அமைக்கப்பட்டு முதற்காலை வேள்விகள் துவங்கப்பட்டது.

முதற்கால பூஜை துவங்கப்பட்டு 6 கால பூஜைகள் இன்று அதிகாலை துவங்கப்பட்டு யாகசாலைகள் மஹா பூர்ணாஜூதி முடிவுற்று கலசங்கள் புறப்பாடு செய்யப்பட்டு அனைத்து விமானங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Hindusthan Samachar / P YUVARAJ