சென்னை சேப்பாக்கத்தில் குடிப்பழக்கத்தை விட முடியாமல் அவதி - வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை!
சென்னை, 23 நவம்பர் (ஹி.ச.) சென்னை சேப்பாக்கம் லாக் நகரை சேர்ந்தவர் பின்னி மனோகர் (வயது 70). இவரது மனைவி செல்வி (வயது 60). இவர்களுக்கு ராஜ்குமார் ஆ/47 என்ற மகனும், ராஜ்குமாரி பெ/42 என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தங்கள் குடும்பத
Post


சென்னை, 23 நவம்பர் (ஹி.ச.)

சென்னை சேப்பாக்கம் லாக் நகரை சேர்ந்தவர் பின்னி மனோகர் (வயது 70). இவரது மனைவி செல்வி

(வயது 60).

இவர்களுக்கு ராஜ்குமார் ஆ/47 என்ற மகனும், ராஜ்குமாரி பெ/42 என்ற மகளும் உள்ளனர்.

இருவருக்கும் திருமணமாகி தங்கள் குடும்பத்துடன் வேளச்சேரியில் வசித்து வருகின்றனர்.

பின்னி மனோகர், அவரது மனைவி செல்வி இருவரும் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள்.

காவலாளியாக வேலை பார்த்து வந்த பின்னி மனோகர் வயது முதுமை காரணமாக வேலையை விட்டு நின்று விட்டார்.

பணம் இல்லாததால் வீட்டிலிருந்த மரத் தளவாட சாமான்கள், பிரிட்ஜ் ,ஃபேன் , பாத்திரங்கள் என ஒவ்வொன்றாக விற்று குடித்துள்ளனர்.

எல்லா பொருட்களையும் விற்று குடித்து விட்டதால் பணம் இல்லாமல் செலவுக்கு மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

குடி பழக்கத்தையும் விட முடியாததால் இருவரும் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு மேற்கூரை கம்பியில் சேலைகளை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இருவரின் சடலத்தையும் கைப்பற்றிய திருவல்லிக்கேணி போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஓமாந்தூரார் தோட்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Hindusthan Samachar / P YUVARAJ