Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 23 நவம்பர் (ஹி.ச.)
ஆந்திரா மாநிலம், புட்டபர்த்தியில், ஸ்ரீசத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் கடந்த நவ.13ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.
சத்ய சாய்பாபாவின் பிறந்த நாளான இன்று (நவ 23) சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இன்றைய நிகழ்ச்சியில் துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஆந்திர அரசின் அமைச்சர் நாரா லோகேஷ், தெலுங்கானாவின் முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திராவின் முதல்வர் என். சந்திரபாபு நாயுடு பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்த நாள் நுாற்றாண்டு விழா முன்னிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்து கடிதத்தை, புட்டபர்த்தியில் இன்று நடந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு, சத்யசாய் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர் ஜே ரத்னகரிடம் வழங்கினார்.
Hindusthan Samachar / vidya.b