Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 நவம்பர் (ஹி.ச.)
தொழிலாளர்கள் தோழன் என்று சொல்லிக்கொண்டு அவர்கள் நலனுக்காக எதுமே போராடாதவர்கள் கம்யூனிஸ்ட் என்று தமிழிசை சௌந்தரராஜன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்நாடு மாநில கம்யூனிஸ்ட் தலைவர் சண்முகம் எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
பிஜேபி தலைவர் தமிழிசை வசௌந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூய்மைப் பணியாளர்கள் போக்குவரத்து தொழிலாளர்களுக்காக கம்யூனிஸ்கள் தான் போராடுகிறார்கள் என்று இப்போதாவது ஒப்புக்கொண்டதற்கு நன்றி.
தொழிலாளர் தொகுப்பு சட்டங்கள் தொழிலாளர் நலனுக்காகத் தான் கொண்டுவரப்பட்டுள்ளது என்று நீட்டி முழக்கி இருக்கிறார் தமிழிசை. அது உண்மை என்றால், தொழிலாளர்கள் மத்தியில் எங்களுடன் ஒரே மேடையில் விவாதிக்க தைரியம் இருக்கிறதா?
பலமுறை விளக்கங்கள் கொடுத்த பிறகும் அறுதப் பழசான ஒரு குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் இந்த கும்பல் சொல்லிக் கொண்டே இருக்கிறது. உண்டியலில் இருந்து பெட்டிக்கு மாறி விட்டோமாம்! பி.எம்.கேர் பண்ட் (PM Care Fund) என்ற பெயரில் எத்தனை ஆயிரம் கோடிகள் வசூலிக்கப்பட்டது. அது எங்கே பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது என்பதை மறைக்கும் யோக்கிய சிகாமணிகள்.
தேர்தல் பத்திரம் என்ற பெயரில் முதலாளிகளிடம் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கொள்ளையடிக்கும் பிஜேபி கும்பலுக்கு கம்யூனிஸ்டுகளை பற்றி பேச கடுகளவும் அருகதை இல்லை என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ