வாக்குரிமையை பாதுகாக்கும் பணியில் உறுதியாக நின்று செயல்படவேண்டும் - செல்வப்பெருந்தகை
சென்னை, 23 நவம்பர் (ஹி.ச.) அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, பாஜக அரசு எப்படி தேர்தலை தங்கள் வசப்படுத்த பார்க்கிறார்கள் என்பதை குறித்து ஆதாரத்துடன் வெளியிட்டு வருகிறார் என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெர
Selva


Tweet


சென்னை, 23 நவம்பர் (ஹி.ச.)

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, பாஜக அரசு எப்படி தேர்தலை தங்கள் வசப்படுத்த பார்க்கிறார்கள் என்பதை குறித்து ஆதாரத்துடன் வெளியிட்டு வருகிறார் என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

அன்பு தலைவர் ராகுல்காந்தி ஒன்றிய பாசிச பாஜக அரசு தேர்தலை எப்படி தங்கள் வசப்படுத்த முயல்கிறது என்பதையும், அவர்களுக்கு துணைநிற்கும் தேர்தல் ஆணையம் எவ்வாறு முறைகேடுகளை மறைக்கிறது என்பதையும் நாடு முழுவதும் தொடர்ந்து ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வந்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, இன்று சமாஜ்வாதி கட்சி தலைவர் யாதவ் அகிலேஷ் அவர்கள் வெளியிட்டுள்ள தகவல், 50,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதையும், வாக்காளர் பெயர்கள் காரணமின்றி அகற்றப்பட்டுள்ளதையும், சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் மூலம் பாஜக அரசு ஜனநாயகத்தை திட்டமிட்டு சிதைக்கிறது என்பதற்கான மிகப் பெரிய சான்றாகும்.

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தோழர்கள் அனைவரும் அதிக விழிப்புடன் செயல்பட்டு, இந்த அநீதி குறித்து மக்களிடம் தெளிவாக விளக்கி, வாக்குரிமையை பாதுகாக்கும் பணியில் உறுதியாக நின்று செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

ஜனநாயகத்தை காப்பது நம்முடைய அனைவரது கடமையும் பொறுப்பும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ