Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 23 நவம்பர் (ஹி.ச.)
அய்யா வைகுண்ட சாமியின் பஞ்சபதிகளில் ஒன்றான கன்னியாகுமரி சின்னமுட்டத்தில் உள்ள முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியானது அய்யா வைகுண்டசாமி விஞ்சைபெற்ற இடமாகும்.
இக்கோவிலில் கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று (நவ 23) அதிகாலை 4 மணிக்கு முட்டப்பதி அய்யா வைகுண்ட சாமி பதியில் திருநடை திறக்கப்பட்டு அய்யாவுக்கு பணிவிடைகள் நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து உகப்படிப்பு நடைபெற்ற பின்னர் வாகன பணிவிடையும் மதியம் உச்சிப்படிப்பும் அதைத்தொடர்ந்து நித்திய பால் தர்மமும் அன்னதானமும் நடைபெற்றன. மாலையில் அய்யாவுக்கு பணிவிடை, வாகன பவனி அன்னதர்மம் போன்றவை நடைபெறுகிறது.
கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியில் அய்யாவழி பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. முட்டப்பதி தீர்த்தக்கடலில் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யா வைகுண்டசாமியை வணங்கி வழிபட்டு சென்றனர்.
இதே போல சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதி, முட்டப்பதியில் உள்ள அய்யா மூத்தநயினார் பதி, கன்னியாகுமரி அருகே நரியன்விளையில் உள்ள தெட்சணத்து துவாரகாவதி, ஆமணக்கின்விளை வாவைப்பதி, ரஸ்தாகாடு காயாம்பூபதி உள்பட அனைத்து அய்யா வைகுண்டசாமி பதிகளிலும் கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று (நவ 23) அய்யாவுக்கு பணிவிடைகள் நடைபெற்றன.
Hindusthan Samachar / vidya.b