Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 நவம்பர் (ஹி.ச.)
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்
இதுவரை 174 சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரத்தை நிறைவு செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
மீதமுள்ள தொகுதிகளுக்கான பிரசாரத்தை இந்த மாத இறுதியில் தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.
ஈரோடு மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 தொகுதிகளில் மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் நிறைவு செய்துள்ளார்.
மீதமுள்ள பவானி, பவானிசாகர், ஈரோடு மேற்கு, பெருந்துறை, அந்தியூர், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிகளில் இம்மாத இறுதியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரும் 30 ஆம் தேதி கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் பிரசாரம் செய்ய அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள ஈரோடு மாவட்ட அதிமுகவினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையம் செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / P YUVARAJ