தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்
விழுப்புரம், 23 நவம்பர் (ஹி.ச.) விழுப்புரம் மாவட்ட அதிமுக தலைமை கட்சி அலுவலகத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் , அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் : அப்போது அவர் பேசுகையில் : தமிழகத்தில்
Cv shanmugam


விழுப்புரம், 23 நவம்பர் (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்ட அதிமுக தலைமை கட்சி அலுவலகத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் , அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் :

அப்போது அவர் பேசுகையில் :

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுபேற்று நான்கரை ஆண்டுகளில்

கஞ்சா, அபின் ,போதை மாத்திரை உள்ளிட்ட போதைகள் அதிகரித்துள்ளது.

இதனால் குற்றச்சம்பங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, வீட்டில் உள்ள பெண்களுக்கும், வேலைக்கு செல்வோர், சாலையில் நடந்து செல்வோர், பள்ளிக்கு செல்கிற பெண் பிள்ளைகளுக்கும் கூட இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த ஆட்சியில் முதல்வர் கும்பகர்ண தூக்கத்தில் இருந்து வருகிறார் எனவும், மக்களை திசை திருப்பி, பொய்யான தகவல்களை கூறி மக்களை மடைமாற்ற பார்ப்பதாகவும், தமிழகத்தில் சிறுமிகள் பலகாரம் மற்றும் கூட்டு பலாத்காரம் செய்யும் நிகழ்வு தினம் தோறும் செய்தியாக மாறி உள்ளதாக வேதனை தெரிவித்த சி.வி.சண்முகம் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் திமுக உறுப்பினர் இல்லை என சொன்ன திமுக வானூர் ஒன்றியத்தில் ஒன்றிய திமுக கழக செயலாளர் பாஸ்கர் என்பவர் கணவனால் கைவிடப்பட்ட பெண் மிரட்டி பலாத்காரம் செய்ததாக குற்றம்

சாட்டப்பட்டுள்ளது.

இவர் மாவட்ட செயலாளர் லட்சுமணன் நியமனம் செய்யப்பட்டவர் எனவும், கைவிடப்பட்ட பெண்ணை ஆசை வார்த்தை காட்டி அரசு பணி வாங்கி தருவதாக கூறி வலுக்கட்டாயமாக அவர் தன்னுடைய கார் ஷெட்டில் வைத்து கற்பழித்துள்ளார்.

அதனை முழுமையாக வீடியோ எடுத்துவைத்து கொண்டு மாவட்டத்தில் நான் பலமாக இருப்பவன் தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது அமைச்சர்கள் எல்லாம் எனக்கு பலமாக இருக்கிறார்கள் வெளியே சென்று சொன்னாலும் எதுவும் செய்ய முடியாது.

கற்பழிப்பு சம்பவத்தை வீடியோ எடுத்து வைத்துள்ளேன்,நான் சொல்வதை கேட்க வேண்டும், நான் அழைக்கும் போதெல்லாம் வர வேண்டும் இல்லையென்றால் வீடியோவை வெளியிட்டு விடுவேன் அந்த பெண்ணை அச்சுறுத்தி மிரட்டி கடந்த ஆறு மாத காலமாக கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்ணை திமுக பிரமுகர் கற்பழித்து வந்துள்ளார்.

அந்த வீடியோவை கொடுத்துவிடுங்கள் என பெண் கேட்ட போதும் அதனை கொடுக்க மறுத்து பெண்னை மிரட்டி வந்துள்ளதாகவும், இதுக்குறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் புகார் அளித்து ஆறு நாட்களாகியும் இன்று வரை காவல்துறையினர் மொத்தமாக இருந்து வருவதாகவும், அந்த பெண்ணை ஆசை காட்டி மோசம் செய்த மிரட்டப்பட்டதாகவோ, துன்புறுத்தப்பட்டதாகவோ பிரிவு எதுவும் சேர்க்கப்படவில்லை வெறும் பிரிவு 66 யை மட்டும் காவல்துறையினர் பயன்படுத்தி உள்ளதாக குற்றச்சாட்டினார்.

மேலும் சாதாரண வழக்குகளில் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து அடித்து உதை குற்றவாளிகள் கொலை செய்யப்படுகிற நிலைமை எல்லாம் தமிழகத்தில் இருந்துள்ளது. ஆனால் ஆறு மாத காலம் ஆதரவற்ற பெண் கற்பழித்து செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகர் மீது ஸ்டாலின் தலைமையில் காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, என்ன செய்து கொண்டிருக்கிறது காவல்துறை ,தூங்கிக் கொண்டிருக்கிறதா, இல்லையெனில் குற்றவாளிக்கு துணை போகிறதா , ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சி போன்ற நீதியா , பெண்களுக்கு தமிழகத்தில் எந்த பாதுகாப்பும் இல்லௌ, திமுகவினரால் பெண் கற்பழிக்க பட்டால் வழக்கு பதிவு செய்தாலும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா என கேள்வி எழுப்பினார்.

மேலும் திமுக மாவட்ட செயலாளர் லட்சுமணன் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று இந்த வழக்கை முடித்து வைக்குமாறு காவல்துறையை மிரட்டியதாக குற்றம் சாட்டிய சி.வி.சண்முகம் இன்னமும் அந்த கற்பழித்த குற்றவாளி சுகந்திரமாக சுற்றி வருவதாகவும் அவர் மீது கிளியனூர் காவல் நிலையத்தில் ஆள் கடத்தல், பஞ்சமி நில மோசடி வழக்கு , தனியார் நிலம் மற்றும் குவாரி உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிப்பது போன்ற பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாகவும், இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் மிகப்பெரிய குற்றவாளி தான் இந்த ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் எனவும் , தொடர்ந்து குற்றங்களில் ஈடுப்பட்டு வருபவரை ஒன்றிய செயலாளராக பதவி கொடுத்து அதிகாரம் கொடுத்துள்ள திமுக எதுவும் நடக்காதது போல் காட்டிக்கொள்வதாகவும், இச்சம்பவம் குறித்து உளவுத்துறை சொல்லவில்லையா, காவல்துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை, மாறாக

திமுக தலைமை குற்றவாளியை காப்பாற்றிக்கொண்டு இருப்பதாகவும்,

திமுக தலைமையே சரியில்லை, துணை முதலமைச்சரே ஆபாச படங்களை வெளியிட்டு வருகிறார், அதைப்பற்றியே கேட்காத தலைவரே எங்களை என்ன செய்ய முடியும் என்ற தைரியம் திமுகவினர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகும் விமர்சித்தார்.

எனவே காவல்துறை இனியாவது காலம் தாழ்த்தாமல் உரிய விசாரணை செய்து பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டுவதையும், அச்சுறுத்துவதையும் விட்டுவிட வேண்டும், வழக்கை வாபஸ் பெற வேண்டும் என அந்த பெண்ணிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், நடந்த சம்பவங்களை மாற்றி எழுதிக் கொடுக்குமாறு அந்த பெண்ணுக்கு காவல்துறையினர் மிரட்டி வருவதாகவும், இவைகளையெல்லாம் காவல்துறையினர் கைவிட வேண்டும் காவல்துறையினர் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து எப்படிப்பட வேண்டும் எனவும் கொடுமையான குற்றத்திற்கு காவல்துறையினர் எப்படி துணை நிற்க முடியும் எனவும், எனவே காவல்துறையும் தமிழக முதல்வரும் கற்பழிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும் வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய சி.வி.சண்முகம்

காவல்துறை உடனடியாக குற்றவாளியை கைது செய்ய வேண்டும், குற்றவாளி சுதந்திரமாக சுற்றி திரிவதோடு, அந்த பெண்ணை மிரட்டி வருகிறார். அந்த பெண்ணிற்கு நாளைக்கு ஏதேனும் நடந்தால் திமுகவினர் தான் பொறுப்பு எனவும் உடனடியாக இந்த வழக்கு மீது அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், குற்றவாளி கைது செய்ய வேண்டும் இல்லையென்ன்றால் அதிமுக சார்பில் ஓரிரு நாளில் அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என சி.வி.சண்முகம் எச்சரித்துள்ளார்.

அதிமுக வில் இருந்து பலர் விலகி வருவதாக செய்தியாளர்கள் கேள்விக்கு, அதிமுகவில் இருந்து யாரும் வெளியேறவில்லை எனவும், செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் , மனோஜ் பாண்டியன் அதிமுகவில் இல்லை அவர் ஓபிஎஸ் அணி எனவும் தெரிவித்தார்.

Hindusthan Samachar / Durai.J