காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சியையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்!
சென்னை, 23 நவம்பர் (ஹி.ச.) காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சியையொட்டி சென்னை, கோவை, கன்னியாகுமரியில் இருந்து உத்தரபிரசேதம் மாநிலம் பனாரஸுக்கு 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ள
காசி தமிழ் சங்கமம்


சென்னை, 23 நவம்பர் (ஹி.ச.)

காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சியையொட்டி சென்னை, கோவை, கன்னியாகுமரியில் இருந்து உத்தரபிரசேதம் மாநிலம் பனாரஸுக்கு 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

கன்னியாகுமரியில் இருந்து நவ.29-ம் தேதி முற்பகல் 11.45 மணிக்கு சிறப்பு ரயில் (06001) புறப்பட்டு, டிச.1-ம் தேதி இரவு 11.15 மணிக்கு பனாரஸை சென்றடையும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து டிச.2-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு ரயில் (06003) புறப்பட்டு, மறுநாள் இரவு 11.15 மணிக்கு பனாரஸை அடையும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து டிச.6-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு ரயில் (06007) புறப்பட்டு, மறுநாள் இரவு 11.15 மணிக்கு பனாரஸை அடையும்.

கோயம்புத்தூரில் இருந்து டிச.3-ம் தேதி (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு சிறப்பு ரயில் (06005) புறப்பட்டு, வெள்ளிக்கிழமை இரவு 11.15 மணிக்கு பனாரஸை சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி விட்டது.

Hindusthan Samachar / Durai.J