Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 23 நவம்பர் (ஹி.ச)
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலானது வரலாற்று சிறப்பு வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவிலாகும்.
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் தவறாது தரிசித்து செல்லும் ஆலயம் தாணுமாலயன் கோவில் ஆகும்.
இந்த கோவிலில் ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி அமைந்து உள்ளது. இங்கு 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இந்த ஆஞ்சநேயருக்கு மூலநட்சத்திர தினமான இன்று (நவ 23) காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆஞ்சநேயருக்கு எண்ணெய், பால், தயிர், வெண்ணெய், நெய், களபம், சந்தனம், குங்குமம், விபூதி, பன்னீர், இளநீர், தேன் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கி கவசம் சாத்தி அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் ஆனந்தன், சுசீந்திரம் கனிமலை சுவாமி கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்காளர் கண்ணன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Hindusthan Samachar / vidya.b