Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 நவம்பர் (ஹி.ச.)
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் முக்கிய அங்கமாக செயல்பட்டவருமான முரசொலி மாறனின் நினைவு நாள் இன்று
(நவ 23) அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (நவ 23) எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
அறிவுத்திருவிழா எடுத்த நம் இயக்கத்தின் அறிவுமுகமாக டெல்லியிலும் தோகா மாநாட்டிலும் தடம் பதித்தவர் முரசொலி மாறன் அவர்கள்.
தலைவர் கலைஞரின் மனசாட்சியாகவும், கழகம் கடந்து வந்த நெருப்பாறுகளின் வரலாற்று சாட்சியாகவும் நிலைபெற்ற திரு. முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாளில் அவரது பணிகளைப் போற்றி வணங்குகிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b