Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 23 நவம்பர் (ஹி.ச.)
தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி வளாக உள் அரங்கத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இருந்து இன்று(நவ 23) காலை விஜய் புறப்பட்டுச் சென்றார். அவர் காலை 11 மணியளவில் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றடைந்தார்.
இந்த கல்லூரி வளாகத்தில் போதுமான இருக்கைகளும் தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.மற்ற யாருக்கும் அனுமதி கிடையாது.
இதற்காக அவர்களுக்கு ‘கியூஆர்’ கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் பங்கேற்கும் பிரச்சார நிகழ்ச்சி என்பதால், இந்த கூட்டத்தில் விஜய் என்ன பேசப்போகிறார் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு குழந்தைகளுடன் வந்த பெண்களை, புஸ்ஸி ஆனந்த் அன்பாக பேசி வெளியேற்றினார்.
இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / vidya.b