Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 நவம்பர் (ஹி.ச)
தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட காங்கிரசின் ஐவர் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்தி பவணியில் நடைபெற்று வருகிறது.
2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்காக, ஐந்து பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை தேசிய காங்கிரஸ் அறிவித்து உள்ளது.
குறிப்பாக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கோவாவைச் சேர்ந்த, அகில இந்திய காங்., செயலர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலர் சூரஜ் ஹெக்டே கூடுதல் பொறுப்பாளர்,
முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வாவின் மகன் நிவேதித் ஆல்வா, தமிழக காங்கிரஸ் மேலிட கூடுதல் பொறுப்பாளர். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் ஆகிய 5 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதன் முதல் ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறுகிறது.
இதில் எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது, எத்தனை தொகுதிகள் கேட்பது குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ