தேஜஸ் விமானம் விழுந்து விமானி உயிரிழப்பு - விமானப்படை வீரருக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அஞ்சலி
கோவை, 23 நவம்பர் (ஹி.ச.) துபாய் விமான கண்காட்சியில் நடைபெற்று வருகிறது. இந்தியா உட்பட 115 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்று உள்ளன. நேற்று முன்தினம் பிற்பகல் 2.10 மணி அளவில் விமான சாகச கண்காட்சி நடைபெற்றது இதில் சூலூர் விமான
Tejas aircraft crash causes pilot's death: Coimbatore District Collector pays tribute to the Air Force officer.


கோவை, 23 நவம்பர் (ஹி.ச.)

துபாய் விமான கண்காட்சியில் நடைபெற்று வருகிறது.

இந்தியா உட்பட 115 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்று உள்ளன.

நேற்று முன்தினம் பிற்பகல் 2.10 மணி அளவில் விமான சாகச கண்காட்சி நடைபெற்றது இதில் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து சென்ற தேஜஸ் எம்.கே 1 இலகு ரக போர் விமானத்தின் விமானி 37 வயது நமன்சியால் பறந்து சென்று சாகசம் செய்த விமானம் திடீரென வானில் இருந்து தரையை நோக்கி பறந்து வந்து விழுந்து தீப்பிடித்து எறிந்தது. இதில் விமானி நமன் சியால் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

சூலூர் விமானப்படை தளத்தில் நமது சியான் குட் மார்னிங் கமாண்டராக பணியாற்றி வந்தார்.

விபத்து நடந்த விமானத்தை கண்காட்சியில் இடம்பெறுவதற்காக கோவையில் இருந்து துபாய் வரை அவர் இயக்கியதாக தெரிகிறது. அவரது உயிரிழப்பால் சூலூர் விமானப்படை தளம் சோகமயமாக காட்சி அளிக்கிறது.

சூலூர் விமானப்படை குடியிருப்பில் நமன்சியால் தனது மனைவி மற்றும் ஏழு வயது குழந்தையுடன் வசித்து வந்தார். அவருடைய மனைவியும் விமானப்படை அதிகாரி தான். தற்பொழுது விமானப்படை தொடர்பாக மேற்படிப்பு படித்து வருகிறார். 7 வயது பெண் குழந்தை இரண்டாம் வகுப்பு படித்து வருகிறாள். நமன்சியால் விமான விபத்தில் உயிரிழந்ததை அறிந்ததும் அவரது மனைவி மற்றும் ஏழு வயது குழந்தை கண்ணீர் விட்டு கதறி அழுதபடி இருந்தனர்.

நேற்று பிற்பகல் அவர்கள் நமன்சியால் உடல் கொண்டு செல்லப்பட்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு விமான மூலம் சூலூரில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இந்த நிலையில் இன்று தற்பொழுது சூலூர் விமானப்படைத்தளத்தில் அவரது உடல் கொண்டு வரப்பட்டது.

அவரது உடலுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

Hindusthan Samachar / V.srini Vasan