Enter your Email Address to subscribe to our newsletters

புட்டபர்த்தி, 23 நவம்பர் (ஹி.ச.)
ஆந்திரா மாநிலம், புட்டபர்த்தியில், ஸ்ரீசத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் கடந்த நவ., 13ம் தேதி தொடங்கி, வரும் 24ம் தேதி வரை கோலாகலமாக நடக்கிறது. உலகின் 140 நாடுகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.
அந்த வகையில் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் விழா இன்று (நவ.,23) பிரசாந்தி மந்திரில் பாபாவின் ஸ்வர்ண ரதோத்சவத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஸ்ரீ சத்ய சாய் மாணவர்களின் வேதம் மந்திர பிரார்த்தனை நடைபெற்றது.
பின்னர் பஜனைகளும் மங்கள ஆரத்தியும் நடைபெற்றது. SSSCT நிர்வாக அறங்காவலர் RJ ரத்னாகர், அனைத்து பிரமுகர்கள் மற்றும் பக்தர்களையும் அன்புடன் வரவேற்றார். விழாவில் தமிழக மற்றும் கர்நாடகாவின் பால் விகாஸ் மாணவர்களின் அழகான கலாசார விளக்கக்காட்சிகள் கொண்டாட்டங்களுக்கு பக்தி துடிப்பை சேர்த்தது.
விழாவில் தலைமை விருந்தினரான இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார்.
ஆந்திர அரசின் அமைச்சர் நாரா லோகேஷ், தெலுங்கானாவின் முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திராவின் முதல்வர் என். சந்திரபாபு நாயுடு பங்கேற்று சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b