Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 23 நவம்பர் (ஹி.ச.)
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா, கருவேப்பம்பூண்டி கிராமத்தில் உள்ள 1,000 ஆண்டுகள் பழைமையான விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலானது இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கு, மாசிமகம், சிவராத்திரி, பிரதோஷம், பவுர்ணமி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்த கோவில் முறையாக பராமரிப்பு இல்லாததால், மூலவர் சன்னிதி, அம்பாள் சன்னிதி, உப சன்னிதிகள், மகா மண்டபம், சுற்றுச்சுவர் ஆகியவை சிதிலமடைந்து இருந்தன.
இந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்க 2024 - 25ம் நிதி ஆண்டில், கோவில் பொதுநிதியின் கீழ், 1.14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, சீரமைப்பு பணிகள், எட்டு மாதத்திற்கு முன் துவங்கி நடைபெற்று வருகின்றன.
கோவிலை பழமை மாறாமல் மூலவர் சன்னிதி, மகா சன்னிதி, அம்பாள் சன்னிதி ஆகியவை கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறுகையில்,
கருவேப்பம்பூண்டி விஸ்வநாதர் கோவில் புதுப்பிக்கும் பணி மூன்று மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்று கூறினர்.
Hindusthan Samachar / vidya.b