கழிவு மீன் ஆலைகளை மூடக்கோரி இன்று தூத்துக்குடியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில்  திருமுருகன் காந்தி பங்கேற்பு
தூத்துக்குடி, 23 நவம்பர் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணி கிராமத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள, துர்நாற்றம் வீசுகின்ற, 3 கழிவு மீன் நிறுவனங்களுக்கு அரசு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் பொதுமக்கள் தொடர்ந்து 3 ஆண
தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில் இன்று கழிவு மீன் ஆலைகளை மூடக்கோரி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில்  திருமுருகன் காந்தி பங்கேற்பு


தூத்துக்குடி, 23 நவம்பர் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணி கிராமத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள, துர்நாற்றம் வீசுகின்ற, 3 கழிவு மீன் நிறுவனங்களுக்கு அரசு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் பொதுமக்கள் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த கோரிக்கைக்காகவும், அனைத்துப் பேருந்துகளையும் பொட்டலூரணியில் நின்று செல்லும்படி இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இன்று (நவம்பர் 23ம் தேதி) நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளதாக போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / JANAKI RAM