Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 23 நவம்பர் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அருவி அப்பகுதியின் பிரபலமான சுற்றுலா தளமாகும்.
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு என்ற பகுதியில் செங்கல்தேரிக்கு அருகே உள்ள பச்சையாறு தான் மணிமுத்தாறு அருவியின் பிறப்பிடம் ஆகும்.
இந்த ஆறு அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி வழியாக தாமிரபரணி ஆற்றில் கலந்து விடுகிறது.
மழைக்காலங்களில் அதிகளவு நீர் சேர்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீணாக கடலில் கலக்கிறது. இதனைத் தடுத்து, விவசாயிகளுக்கு உதவும் விதமாக மணிமுத்தாறு ஆற்றின் குறுக்கே மணிமுத்தாறு அணை கட்டப்பட்டது.
தமிழகத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் மணிமுத்தாறு அணை மற்றும் அருவியைக் காண சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால்
சுற்றுலா பயணிகள்
அருவியில் குளிக்க தொடர்ந்து
5-ஆவது நாளாக இன்றும் வனத்துறை தடை விதித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b