Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 23 நவம்பர் (ஹி.ச)
கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
கவிஞர் ஈரோடு தமிழன்பன்
சொல்லும் செயலும் ஒன்றாக அமைத்துக் கொண்டு வாழ்ந்த அரிதான இலக்கியவாதி.
கவிதைகளிலும் நடைமுறை வாழ்க்கையிலும் பெரியாரைப் பின்பற்றி பகுத்தறிவு பாதையில் நடை போட்டவர்.
இலக்கியம் என்பது மக்களுக்காக மட்டுமானதே என்ற மகத்தான செய்தியை தனது வாழ்நாள் மூலம் அறிவித்து, நிறைவாழ்வு முடித்து விடை பெற்று சென்றிருக்கிற ஈரோடு தமிழன்பன் ஐயா அவர்களுக்கு எமது போற்றுதல்கள்.
அவரது குடும்பத்தினருக்கு எங்கள் ஆறுதல்கள் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ