உலகக் கோப்பை ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியில் பங்கேற்க மதுரை வந்த கனடா அணிக்கு உற்சாக வரவேற்பு!
மதுரை, 23 நவம்பர் (ஹி.ச.) 14-வது ஹாக்கி ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக கனடா அணியினர் ஏர் இந்தியா விமான மூலம் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கனடா அணி ஹாக்கி வீ
ஹாக்கி


ஹாக்கி போட்டி


மதுரை, 23 நவம்பர் (ஹி.ச.)

14-வது ஹாக்கி ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக கனடா அணியினர் ஏர் இந்தியா விமான மூலம் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கனடா அணி ஹாக்கி வீரர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றார்.

பின்னர் தமிழக பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து வரவேற்றதுடன் கரகாட்டம், ஒயிலாட்டம், நாதஸ்வரம் மற்றும் தவில் வாத்தியங்கள் வாசித்து ஹாக்கி வீரர்களை வரவேற்றனர்.

Hindusthan Samachar / Durai.J