Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 நவம்பர் (ஹி.ச.)
இந்திய பங்குச் சந்தை கடந்த வாரம் வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கான அறிகுறிகளுடன் இருந்தன. வெள்ளிக்கிழமை அன்று பங்குச்சந்தைகள் நடப்பு ஆண்டிற்கான புதிய உச்சத்தைன் தொட்டு முடிவடைந்தன.
இந்த நிலையில் வரும் திங்கள் கிழமை வாங்க வேண்டிய பங்குகள் எவை என்பது குறித்து சாய்ஸ் புரோக்கிங்கின் நிர்வாக இயக்குனர் சுமீத் பகடியா பரிந்துரை வழங்கியுள்ளார்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் பங்கை ரூ.15977க்கு வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் இலக்கு விலை ரூ.17250 என்றும், ஸ்டாப் லாஸ் ரூ.15300 என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இண்டிகோ நிறுவனத்தின் பங்கை ரூ.5843.50க்கு வாங்கலாம்.
இதன் இலக்கு விலை ரூ. 6300, ஸ்டாப் லாஸ் ரூ.5600 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐடிசி நிறுவனத்தின் பங்கை ரூ.407.85க்கு வாங்கலாம்.
இதன் இலக்கு விலை ரூ.440, ஸ்டாப் லாஸ் ரூ.390 என கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM